இலங்கை
விபத்தில் சிக்கிய 20 சாரண மாணவர்கள்!
விபத்தில் சிக்கிய 20 சாரண மாணவர்கள்!
ராகம, படுவத்த பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 09 சிறுவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த பேருந்தில் 20 சிறுவர்கள் பயணித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சபுகஸ்கந்தவில் உள்ள பாடசாலை ஒன்றைச் சேர்ந்த சாரணர்கள் குழு, படுவத்த மத்திய கல்லூரியில் நடைபெற்ற ஜம்போரியில் பங்கேற்று திரும்பிக் கொண்டிருந்தபோது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்து வீதியை விட்டு விலகி வேக கட்டுப்பாட்டு இழந்து மோதி கவிழ்ந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும்,பேருந்தின் பிரேக்கிங் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
