சினிமா
தீபாவளி ரேஸில் எல்லை மீறிய வெற்றியில் டியூட்.! 3வது நாள் கலெக்சன் எவ்வளவு தெரியுமா?
தீபாவளி ரேஸில் எல்லை மீறிய வெற்றியில் டியூட்.! 3வது நாள் கலெக்சன் எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவருடைய வளர்ச்சி 2கே கிட்ஸ்களின் சூப்பர் ஸ்டார் என்ற இடத்திற்கு அவரை நகர்த்தும் வகையில் அமைந்துள்ளது. பிரதீப் நடிப்பில் வெளியான லவ் டுடே படம் 100 கோடி ரூபாயை வசூலித்தது. அதைத் தொடர்ந்து வெளியான டிராகன் படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இது பிரதீப்பின் கடுமையான மற்றும் நேர்மறையான உழைப்பை வெளிக்காட்டியது. தற்போது கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் நடித்த டியூட் திரைப்படம் கடந்த 17ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமீதா நடித்திருந்தார். இந்த படம் தொடர்பில் கலவையான விமர்சனங்கள் எழுந்தன.எனினும் 2k கிட்ஸ்களுக்கு பிடித்த படமாக டியூட் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் சக்கைப் போடு போட்டு வருகின்றது. இந்த படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் டியூட் திரைப்படம் இரண்டு நாட்களில் 45 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், மூன்றாவது நாளில் 10. 50 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி இந்தியாவில் மட்டும் மொத்தமாக 30.5 கோடி வசூலித்து டியூட் படம் டாப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
