இலங்கை
சோதனை என்ற பெயரில் வீட்டில் கொள்ளையடித்த கும்பல் சிக்கியது
சோதனை என்ற பெயரில் வீட்டில் கொள்ளையடித்த கும்பல் சிக்கியது
ரூ1 கோடியே எழுபத்தைந்து இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டமை தொடர்பான வழக்கில், 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி, கேகாலையின் திக்ஹேன பகுதியிலுள்ள ஒரு வீட்டிற்கு பொலிஸார் என கூறிக் கொண்ட மூன்று பேர் வந்துள்ளனர்.
அவர்கள் குறித்த வீட்டில் போதைப்பொருள் இருப்பதாகவும், வீட்டைச் சோதனையிட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இவ்வாறு வீட்டைச் சோதனையிடும் முறையில் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றிய அவர்கள், வீட்டிலிருந்த உந்துருளியிலேயே தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
