Connect with us

இலங்கை

யாழில் அறிமுகமாகியுள்ள பொலிஸாரின் விசேட சேவை மையம் !

Published

on

Loading

யாழில் அறிமுகமாகியுள்ள பொலிஸாரின் விசேட சேவை மையம் !

யாழ். நகரை மையமாகக் கொண்டு பொலிஸாரின் விசேட சேவை மையம்  நேற்றையதினம்  முதல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

வீதி போக்குவரத்து பிரச்சினைகள், சிறு குற்றங்கள் என்பவற்றை தவிர்க்கும் வகையில்  யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமஹா தலைமையில் சம்பிரதாயபூர்வமாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இவ்விசேட சேவை மையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Advertisement

இதன் சேவையை பெற்றுக்கொள்ள 021- 222 2221 என்ற  தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு பொதுமக்கள் பிரச்சனைகளை முறையிடுவதன் மூலம் குறித்த பகுதிக்கு பொலிஸார்  விரைந்து சென்று, பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதாவது  யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள எந்த பகுதியில் இருந்தும் இந்த இலக்கத்திற்கு அழைத்து  முறையிட்டால் அந்தந்த பகுதி பொலிஸ் நிலையங்களின் ஊடாக பொது இடங்கள் மற்றும் போக்குவரத்துக்களின்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக உடனடி தீர்வினைப் பெற முடியும் எனவும் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன