Connect with us

தொழில்நுட்பம்

கச்சிதம், வேகம், பாதுகாப்பு… ரூ.1,000 பட்ஜெட்டில் 5-இன்-1 சார்ஜிங் பவர் ஸ்ட்ரிப்!

Published

on

The Stuffcool ChargeCube 30

Loading

கச்சிதம், வேகம், பாதுகாப்பு… ரூ.1,000 பட்ஜெட்டில் 5-இன்-1 சார்ஜிங் பவர் ஸ்ட்ரிப்!

அதிகமான தொழில்நுட்ப கேஜெட்களை வைத்திருப்பவர்களுக்கு, சார்ஜ் செய்வதற்குப் போதுமான பவர் அவுட்லெட்டுகள் கிடைப்பது ஒரு பெரிய சவாலாக உள்ளது. விமான நிலையங்கள், கஃபேக்கள் அல்லது ஹோட்டல் அறைகள் என எங்கு சென்றாலும், மொபைல் போன்கள், லேப்டாப்கள், டேப்லெட்டுகள், டி.டபிள்யூ.எஸ் இயர்பட்ஸ் மற்றும் கேமராக்கள் போன்ற பல சாதனங்களை சார்ஜ் செய்யப் போதுமான பிளக் பாயிண்டுகளைத் தேடவேண்டியிருக்கிறது. பவர் பேங்குகள் இருந்தாலும், அவற்றுக்கும் சார்ஜ் தேவைதானே? இந்தச் சிக்கலுக்குப் பல சார்ஜிங் பாயிண்ட் கொண்ட பவர் ஸ்ட்ரிப் தீர்வாக இருந்தாலும், அவை பெரும்பாலும் பெரிதாகவும், கனமாகவும், எடுத்துச்செல்ல சிரமமாகவும் இருக்கின்றன.நல்ல தரமான  பவர் ஸ்ட்ரிப் விலை அதிகமாகவும், விலை குறைந்தவை பாதுகாப்பற்றவையாகவும் இருப்பது இன்னொரு குறை. இதனால்தான், கச்சிதமான, எடுத்துச் செல்ல எளிதான, நல்ல தரமான மற்றும் மலிவான விலையில் கிடைக்கும் ஸ்டஃப்கூல் சார்ஜ்க்யூப் 30 பவர் ஸ்ட்ரிப் பற்றி பார்ப்போம். 2023-ல் சுமார் ரூ.2,500 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டஃப்கூல் சார்ஜ்க்யூப் 30 பவர் ஸ்ட்ரிப், இப்போது ரூ.1,399 என்ற விலையில் கிடைக்கிறது. சரியான ஆஃபர்களுடன் 1,000 ரூபாய்க்கும் குறைவாகவே வாங்க முடியும். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கசாதாரண நீளமான பவர் ஸ்ட்ரிப்களைப் போலல்லாமல், ஸ்டஃப்கூல் சார்ஜ்க்யூப் 30 (Stuffcool ChargeCube 30) சதுர வடிவில் (12 செ.மீ x 10 செ.மீ) அளவிற்கு கச்சிதமாக உள்ளது. இதன் எடை வெறும் 363 கிராம்தான். இது 20000mAh பவர் பேங்கின் எடைக்கு சமம். இது 1.5 மீட்டர் கேபிள் மற்றும் 6A, 250W மூன்று-பின் பிளக்குடன் வருகிறது. இந்த பிளக் ஹோட்டல்கள், விமான நிலையங்கள் மற்றும் கஃபேக்களில் உள்ள பெரும்பாலான அவுட்லெட்களில் எளிதில் பொருந்தும்.சார்ஜ்க்யூப் 30 மேல் பகுதியில் 3 AC சாக்கெட்டுகள் உள்ளன. இவை வழக்கமான 6A சாக்கெட் ஆதரிக்கும் எந்தவொரு சாதனத்தையும் இணைக்க அனுமதிக்கின்றன. நீங்க எடுத்துச் செல்லும் லேப்டாப், மானிட்டர், பிரிண்டர் அல்லது ஸ்கேனர் போன்ற பெரும்பாலான சாதனங்களை இதில் இணைக்கலாம். அதிக பவர் தேவைப்படும் ஏர் கண்டிஷனர், ஃப்ரிட்ஜ் அல்லது மைக்ரோவேவ் போன்றவற்றைத் தவிர்த்து, மற்ற அனைத்து கேஜெட் சார்ஜிங் தேவைகளையும் இது பூர்த்தி செய்கிறது. இதன் பக்கவாட்டில் பவர் ஸ்ட்ரிப்பை ஆன் மற்றும் ஆஃப் செய்வதற்கான ஒரு சுவிட்ச் உள்ளது. மற்றொரு பக்கவாட்டில், USB Type-A, USB Type-C போர்ட் உள்ளது. 2 USB போர்ட் இருப்பதால், ஒரே ஒரு சுவர் அவுட்லெட்டில் இருந்து சார்ஜ்க்யூப் மூலம் 5 சாதனங்கள் வரை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யலாம். 3 AC அவுட்லெட் மூலமாகவும், 2 USB போர்ட்கள் மூலமாகவும். USB போர்ட்கள் மிகவும் வேகமான சார்ஜர்கள், அவை ஒரு சாதனத்தை 30W வேகத்தில் சார்ஜ் செய்ய முடியும்.சார்ஜ்க்யூப் உறுதியான பிளாஸ்டிக்கால் ஆனது மற்றும் எடுத்துச் செல்ல எளிதானது. இதன் AC அவுட்லெட்டுகள் போதுமான இடைவெளியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் சாக்கெட்டுகளில் பிளக்குகள் உறுதியாகப் பொருந்திக் கொள்கின்றன. இது 4 ரப்பர் குமிழ்கள் மீது அமர்ந்திருப்பதால், எந்த மேற்பரப்பிலும் நகராமல் நிலையாக இருக்கும். மேலும், சுவரில் தொங்கவிட விரும்பினால், பின்புறத்தில் அதற்குரிய வசதியும் உள்ளது.முக்கியமாக, இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் சர்ஜ் புரொடெக்டர் வசதியுடன் வருகிறது. இந்தியாவின் முன்னணி டெக் ஆக்சஸரி பிராண்டுகளில் ஒன்றான ஸ்டஃப்கூல் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதும் கூடுதல் நம்பிக்கை அளிக்கிறது. Type-C போர்ட்டில் உள்ள 30W சார்ஜிங் திறன், லேப்டாப் சார்ஜிங் அடாப்டரை எடுத்துச் செல்ல விரும்பாதபோது, மேக்புக் ஏர் அல்லது iPhone போன்றவற்றை விரைவாக சார்ஜ் செய்ய போதுமானது.சார்ஜ்க்யூப் உடன் வரும் கேபிளின் தரம் சிறப்பாக இருந்தாலும், அதன் 1.5 மீட்டர் நீளம் குறைவாக இருப்பதால், இணைக்கப்பட்டுள்ள பவர் அவுட்லெட் அருகில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. சற்று நீளமான கேபிள் கொண்ட ஒரு வேரியண்ட் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலும், வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தில் மட்டுமே இது கிடைப்பதால், இந்த நிறம் எளிதில் தூசியை ஈர்க்கிறது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன