Connect with us

பொழுதுபோக்கு

எஃப்.ஜே செயலால் கடுப்பான நெட்டிசன்கள்… இதுதான் ரொம்ப மோசமான சீசன்; இணையத்தில் பறக்கும் கமெண்ட்

Published

on

fj

Loading

எஃப்.ஜே செயலால் கடுப்பான நெட்டிசன்கள்… இதுதான் ரொம்ப மோசமான சீசன்; இணையத்தில் பறக்கும் கமெண்ட்

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 17 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. போட்டியாளர்களுக்கு இடையில் கடுமையான மோதல்கள் அதிகரித்து வருகிறது. முதல் வாரமே களத்தில் இறங்கிய போட்டியாளர்கள் இப்போதுதான் சற்று சண்டையை நிறுத்திக்கொண்டு சமாதானப் புறாக்களை பறக்க விட்டுக்கொண்டிருக்கின்றனர். இருப்பினும் பிக்பாஸ் அவர்களுக்கு அவ்வப்போது சண்டைகளை தூண்டிவிடும் விதமாக போட்டிகளை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி  கடந்த சீசன்களை போல் அல்லாமல் பெரும்பாலும் இன்ஃபுளுவன்சர்கள் தான் இந்த சீசனில் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். போட்டியாளர்களை இரண்டு குழுக்களாக பிரித்து பிக்பாஸ் ஹவுஸ், லக்ஸுரி ஹவுஸ் என விளையாடி வருகின்றனர். கடந்த வாரம் லக்ஸுரி கவுஸில் இருந்த பார்வதி, பிக்பாஸ் வீட்டு போட்டியாளர்களை வேலை வாங்கியதால் கடுப்பான பிக்பாஸ் வீட்டு போட்டியாளர்கள் ஆத்திரமடைந்து பெரும் பிரச்சனை உருவானது. இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டு போட்டியாளர்கள் பார்வதியை டார்க்கெட் செய்து வருகின்றனர்.பிக்பாஸ் வைத்த பொம்மை பொம்மை பொம்மை பார் போட்டியால் ஹவுஸ் மேட்ஸ் அனைவருக்குள்ளும் சண்டைகள் வெடிக்க ஆரம்பித்தது. இதில் நாமினேஷன் ஃபிரீ பாஸ் பரிசு அதுமட்டுமன்றி கிராண்ட் டின்னர் பார்டி என்றும் அறிவித்தது. இரு வீட்டாரும் மாறி மாறி சண்டை போட இறுதியில் லக்ஸுரி ஹவுஸ் கம்ருதீன் வெற்றிப்பெற்று எவிக்‌ஷன் ஃபிரீ பாஸ் பெற்றார்.இதையடுத்து கடந்த வாரம் திருநங்கையான அப்சரா சி.ஜே போட்டியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். அப்சரா இப்போதுதான் போடியை புரிந்து கொண்டு விளையாடிய நிலையில் திடீரென இப்படி எலிமினேட் செய்யப்பட்டுவிட்டாரே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். இப்படி பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தற்போதைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.Chai karumam fj and aadhirai epd hug panudhunga 💦#BiggBossTamil9#BiggBossTamilpic.twitter.com/ZLHil6wR7iஅந்த வீடியோவில் போட்டியாளர் எஃப்.ஜே, ஆதிரையை கட்டிப்பிடிக்கிறார். இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ள நெட்டிசன்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே இந்த சீசன் தான் மிகவும் மோசமாக உள்ளது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், வர வர பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடல்ட் கண்டெட் அதிகரித்துவிட்டது என்றும் விளாசி வருகின்றனர். இதற்கு முன்பும் எஃப்.ஜே, ஆதிரை மற்றும் கனி மடியில் படுத்திருந்த வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்த நிலையில் தற்போது ஆதிரையை கட்டிப்பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இதையெல்லாம், விஜய் சேதுபதி இந்த வாரம் நிகழ்ச்சியில் கேட்பாரா? இல்லை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன