இலங்கை
வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு
வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு
இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்ரெம்பர் வரையிலான காலப்பகுதியில், வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கான வரவுகள் 827 மில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளதாக இலங்கை முதலீட்டுச்சபை தெரிவித்துள்ளது.
இதில் முதலீடுகளுக்காக பெறப்பட்ட வெளிநாட்டு வணிகக்கடன்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இது 138 சதவீதம் அதிகரிப்பைக்காட்டுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
