இலங்கை
சுட்டுக்கொல்லப்பட்ட பிரதேச சபைத் தலைவருக்கும் ஹரக் கட்டாவுக்கும் தொடர்பு
சுட்டுக்கொல்லப்பட்ட பிரதேச சபைத் தலைவருக்கும் ஹரக் கட்டாவுக்கும் தொடர்பு
இன்றையதினம் சுட்டுக் கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவரைக் கொலை செய்த குழுவைக் கண்டுபிடிக்க நான்கு பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
இதேவேளை, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘ஹரக் கட்டா’ என்ற நதுன் சிந்தகவின் நெருங்கிய கூட்டாளியாக அவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் நடைபெற்று வருகின்றன.
