இலங்கை
நாணயநிதியத்திடம் சிக்குண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 13ஆவது இடம்
நாணயநிதியத்திடம் சிக்குண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 13ஆவது இடம்
சர்வதேச நாணயநிதியத்திடம் அதிகப்படியான தொகையைக் கடனாகப் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தவேண்டியுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை 13ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள 86 நாடுகள் மொத்தமாக சுமார் 162 பில்லியன் அமெரிக்க டொலரை சர்வதேச நாணய நிதியத்துக்குச் செலுத்தவேண்டியுள்ளன. இதில், இலங்கை செலுத்த வேண்டியுள்ள தொகை 2.3 பில்லியன் அமெரிக்க டொலராகும். இந்தக் கடன் பட்டியலில் ஆர்ஜென்டினா முதலிடத்தில் உள்ளது. அந்த நாடு 56.83 பில்லியன் அமெரிக்க டொலரைச் செலுத்தவேண்டியுள்ளது. உக்ரைன் 14.13 பில்லியன் டொலருடன் இரண்டாவது இடத்திலும், எகிப்து 9.38 பில்லியன் டொலருடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இலங்கைக்கு முன்னால் பாகிஸ்தான், ஈக்வடோர், ஐவரி கோஸ்ட், கென்யா, பங்களாதேஷ், கானா, அங்கோலா, கொங்கோ மற்றும் கோஸ்டாரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
