சினிமா
வெள்ளை மலையாள நடிகைகள் எதுக்கு..மாரி செல்வராஜ் சொன்ன விளக்கம்…
வெள்ளை மலையாள நடிகைகள் எதுக்கு..மாரி செல்வராஜ் சொன்ன விளக்கம்…
இயக்குநர் மாரி செல்வராஜ், அவர் இயக்கும் படங்களில் தொடர்ந்து வெள்ளைநிற மலையாள நடிகைகளையே தேர்வு செய்கிறார் என்ற விமர்சனம் அவர்மீது சுமத்தப்பட்டு வருகிறது.ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை பேசுகிறேன் என சொல்லும் நீங்கள் ஏன் இப்படி ஓரவஞ்சனை செய்கிறீர்கள் என்றும் நல்ல அழகான கருமைநிற தமிழ் நடிகைகள் யாரும் உங்களுக்கு கிடைக்கவில்லையா? என்று கூறி வருகிறார்கள். இதுகுறித்த கேள்வி மாரி செல்வராஜிடம் கேட்கப்பட்டது.அதற்கு அவர், திட்டமிட்டு நான் அப்படி செய்வது கிடையாது. ஊனமுற்றவர்களை பற்றிய படங்களை எடுக்கும்போது ஊனமுற்றவர்களை நடிக்க வைத்து துன்புறுத்த முடியுமா? அது போலத்தான் அந்த கதாபாத்திரத்துக்கு யார் தன்னை அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறர்களோ அவர்களை வைத்து தான் படம் பண்ணுகிறேன் என்று கூறியிருக்கிறார்.சம்பந்தமில்லாமல் கேள்விக்கு சரியான பதில் கூறாமல் பேசியதை பலரும் விளாசி வருகிறார்கள்.
