இலங்கை
டெங்குத் தொற்றால் 40,000 பேர் பாதிப்பு
டெங்குத் தொற்றால் 40,000 பேர் பாதிப்பு
நாடளாவிய ரீதியில் இதுவரையான காலப்பகுதியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலைமை மேலும் தீவிரமடையும் என்று தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப்பிரிவு எச்சரித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40 ஆயிரத்து 461தொற்றாளர்கள் இனங்காணப்படடுள்ளனர். 22 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்குப் பரவலின் அதிகரிப்பைக் கருத்திற்கொண்டு 7 சுகாதார மருத்துவ அதிகாரப்பிரிவுகள் அதிஉயர் டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாகவும், 183 குறிப்பிடத்தக்களவு டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் தாம் வாழும் சூழலில், டெங்கு நுளம்புகள் பெருக்கக்கூடிய பகுதிகளை இனங்கண்டு அவற்றை இல்லாதொழித்து சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் டெங்குக் கட்டுப்பாட்டுப்பிரிவு அறிவித்துள்ளது.
