சினிமா
ரன்வீரின் கண்களில் National Crush யார் தெரியுமா.? ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த பதில்!
ரன்வீரின் கண்களில் National Crush யார் தெரியுமா.? ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த பதில்!
இந்திய சினிமா உலகில், ஒரு நடிகை சில மாதங்களில் நாடுமுழுவதும் பேமஸாவதென்றால், அது சாதாரண விஷயமல்ல. ஆனால், தற்போது இந்த சாதனையை மிக வேகமாக பெற்றிருக்கிறார் தெலுங்குத் திரையுலகின் நடிகை ஸ்ரீலீலா.இவர் குறித்து நடிகர் ரன்வீர் சிங் கூறிய சமீபத்திய கருத்துகள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அதாவது, “ஸ்ரீலீலா தான் உண்மையான National Crush! நாங்கள் இணைந்து பணியாற்றப்போகிறோம் என்று தெரிந்ததும் எல்லாரும் எனக்கு Message அனுப்ப ஆரம்பிச்சிட்டாங்க…அத்துடன், புஷ்பாவின் “Kissik” பாடல் அவளுக்கு பெரும் அடையாளம் கொடுத்தது. அவள் விரைவில் பாலிவுட்டின் சிறந்த இயக்குநர்களில் ஒருவருடன் ஹிந்தி டெப்யூ செய்யப் போகிறாள். அதை நான் ஆவலோடு எதிர்நோக்கிறேன்..” என்று கூறியுள்ளார் ரன்வீர். இந்த உரை வெளியாகியதும், ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் ஸ்ரீலீலாவை பற்றி ஆர்வமாக பேசத் தொடங்கியுள்ளனர்.
