இலங்கை
நாட்டில் இன்றும் தொடரும் பலத்த மழை!
நாட்டில் இன்றும் தொடரும் பலத்த மழை!
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையிலேயேஎதிர்வுகூறியுள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, வட மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் மேல், வடக்கு, வடமத்திய, மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
அத்துடன், 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்றும் அமுலில் இருக்கும் எனக் கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மலையகத் தொடருந்து மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் 10 தொடருந்து சேவைகள் இன்று நண்பகல் 12 மணி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
தொடர்ச்சியான பலத்த மழை, காற்று உள்ளிட்டவற்றால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்ள எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
