இலங்கை
தவறான முடிவெடுத்து இளம்பெண் உயிரிழப்பு
தவறான முடிவெடுத்து இளம்பெண் உயிரிழப்பு
இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். நாவற்குழியைச் சேர்ந்த குறித்த பெண், கடந்த 15ஆம் திகதி தவறான முடிவெடுத்து தனக்குத் தானே தீயிட்டுக் கொண்டார். தீக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துமவனையில் இவர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார். இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந. பிறேம்குமார் மேற்கொண்டார்.
