Connect with us

இலங்கை

நடிகை மனோரமாவின் மகன் காலமானார்; சினிமா வட்டாரத்தில் அடுத்தடுத்து இரு மரணங்கள்

Published

on

Loading

நடிகை மனோரமாவின் மகன் காலமானார்; சினிமா வட்டாரத்தில் அடுத்தடுத்து இரு மரணங்கள்

   தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனோரமா. குணச்சித்திரம், காமெடி என பல்வேறு கதாப்பாத்திரங்களில் 1,000 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தார்.

நடிகை மனோரமா கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மனோரமா மறைந்தார்.

Advertisement

பூபதி . அவரைத் திரையுலகில் அறிமுகப்படுத்தி பிரபலமாக்க மனோரமா பல முயற்சிகள் எடுத்தார். ஆனால் அவை தோல்வியில் முடிந்தன.

இருப்பினும், நடிகர் விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் அறிமுகமான பூபதி அதன் பின்னர் சில படங்களில் நடித்தார்.

எனினும், அவரால் திரையுலகில் ஜொலிக்க முடியவில்லை.

Advertisement

இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்த பூபதி(வயது 70) மூச்சு திணறல் காரணமாக இன்று காலை காலமானார்.

அவரது மரணத்துக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளை இசையமைப்பாணர் தேவாவின் சகோதரர் பிரபல இசையமைப்பாளர் சபேஷ்ம் இன்று உயிரிழந்த நிலையில் , சினிமா வட்டாரத்தில் இருவரின் மரணங்களும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன