Connect with us

இலங்கை

சுவிஸ் ஏர் விமானத்தில் முகம் சுழிக்க வைத்த தம்பதியின் செயல்!

Published

on

Loading

சுவிஸ் ஏர் விமானத்தில் முகம் சுழிக்க வைத்த தம்பதியின் செயல்!

  சமூக ஊடகங்களில் ஏராளமானவர்களின் கோபத்தைக் கிளறிய ஒரு காணொளி குறித்து சுவிஸ் விமான நிறுவனம் உள்விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

சுவிஸ் ஏர் வர்த்தக விமானத்தில் ஒரு தம்பதி பாலியல் உறவில் ஈடுபடுவதை அந்தக் காணொளி வெளிப்படையாகக் காட்டியது.

Advertisement

இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதால் பலர் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளனர்.

விமானத்தில் விமானி அறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு கேமராவால் பாலியல் காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் ஏர் விமானத்தில் பயணம் செய்த ஒரு தம்பதி பாலியல் உறவில் ஈடுபட்டதை விமான ஊழியர்களே படம்பிடித்துள்ளனர்.

Advertisement

சமூக ஊடகங்களில் பரவிய இந்தக் காணொளி, பயணிகளின் தனிப்பட்ட உரிமையை மீறும் செயலாகப் பார்க்கப்படுவதுடன், விமான ஊழியர்களின் நடத்தை குறித்த கேள்வி எழுந்துள்ளது.

அண்மையில் பேங்காக்கிலிருந்து சூரிக் சென்ற சுவிஸ் ஏர் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்த ஒரு தம்பதியர் பாலியல் செயலில் ஈடுபட்டுள்ளனர். இது, விமானிகளால் ரகசியமாக பதிவு செய்யப்பட்டது.

அந்தக் காணொளியை தங்களுடைய குழுவில் அவர்கள் பகிர்ந்துள்ளனர். ஆனால் சமூக ஊடகத்திலும் காணொளி கசிந்ததாகக் கூறப்படுகிறது என்று பயணி ஒருவர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

அதேசமயம் இந்தக் காணொளி எப்படி கசிந்தது என்றும் இதில் ஊழியர்களின் பங்கு இருக்கிறதா என்றும் விமான நிறுவன அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன