Connect with us

சினிமா

மனோரமா மகனுக்கு திருமண வாழ்க்கையும் சரியில்லை, திரை வாழ்க்கையும் சரியில்லை..பிரபலம் சொன்ன தகவல்..

Published

on

Loading

மனோரமா மகனுக்கு திருமண வாழ்க்கையும் சரியில்லை, திரை வாழ்க்கையும் சரியில்லை..பிரபலம் சொன்ன தகவல்..

சினிமாத்துறையில் 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் சாதனை செய்தவர் தான் ஆச்சி மனோரமா. எந்த ரோல் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் திறமை ஆச்சிக்கு இருந்தது. முன்னணி இயக்குநர்கள் படங்களிலும் நடிகர்களுடனும் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்தார் ஆச்சி.ராமநாதன் என்பவரை திருமணம் செய்த மனோரமா, மகன் பூபதி பிறந்த இரு வாரங்களிலேயே கணவர் விட்டுபிரிந்துவிட்டார். தன்னையும் தன் குழந்தையையும் விட்டுச்சென்ற கணவருக்கு எதிராக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று மகனை சிறப்பாக வளர்க்க சபதம் எடுத்து வாழ்ந்தார் ஆச்சி.மகனை மருத்துவராக்க முடியவில்லை என்பதால் திரைத்துறையில் ஜொலிக்க வேண்டும் என்று நினைத்தார். அதன்படி மகேந்திரன் இயக்கத்தில் உதிரிப்பூக்கள், விசு இயக்கத்தில் குடும்பம் ஒரு கதம்பம், மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் பூபதி நடித்திருந்தாலும் வெற்றி கிடைக்கவில்லை.மகனுக்காக தூரத்து சொந்தம் என்ற படத்தை தயாரித்தும் தோல்வியை கண்டார் மனோரமா. சினிமாவும் கைக்கூடவில்லை என்பதால் அதைவிட்டு ஒதுங்கி, விரக்தியில் குடிக்கு அடிமையாகினார் பூபதி. இப்படியொரு சூழலில் அவர் நேற்று அக்டோபர் 23 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.அவர் குறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறுகையில், மகன் மீது மனோரமாவுக்கு அவ்வளவு பாசம். எப்படியாவது சினிமாவில் ஜெயித்து வைத்துவிட வேண்டும் என்று நினைத்தார், அதற்காக படமெல்லாம் தயாரித்தார். இது ஒரு பக்கம் இருக்க, பூபதி முதலில் காதல் திருமணம் தான் செய்தார்.தன்னை போலவே தன் மகனும் காடல் திருமணம் செய்து கஷ்டப்பட வேண்டாம் என்று மனோரமா நினைத்தார். பின் பூபதிக்காக அந்த காதல் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார். ஆனால் அவர் நினைத்தபடியே அந்த திருமண வாழ்க்கை பாதியில் முடிந்தது.அது ஆச்சிக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்த பின் இன்னொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்துவைத்தார். அந்த திருமண வாழ்க்கை நல்லபடியாக போனது. மகன் மருத்துவராக முடியாவிட்டாலும் மனோரமாவின் பேரன் மருத்துவராகிவிட்டார் என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன