இலங்கை
செலவினச் சுமையாக மின்சாரசபை; வலுசக்தி அமைச்சர் தெரிவிப்பு
செலவினச் சுமையாக மின்சாரசபை; வலுசக்தி அமைச்சர் தெரிவிப்பு
வரிசெலுத்தும் மக்களுக்கும், பொதுத்திறைச்சேரிக்கும், அரச வங்கிகளுக்கும் மிகப்பெரிய செலவினச் சுமையாக இலங்கை மின்சாரசபை மாறியுள்ளது. இதனால் அதனை மறுசீரமைத்து, புதிதாக 6 நிறுவனக் கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப் புஹாமி. எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய மறுசீரமைப்பைத் தொடர்ந்து நஷனல் சிஸ்டம் ஒபரேட் (பிரைவெட்) லிமிடெட், நஷனல் ட்ரான்ஸ்மிஷன் நெட்வொர்க் சர்விஸ் (பிரைவெட்) லிமிடெட், எலெக்ட்ரிசிட்டி ஜெனரேசன் (பிரைவெட்) லிமிடெட், எலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரி பூசன் (பிரைவெட்) லிமிடெட், எனெர்ஜி வென்டேர்ஸ் லங்கா (பிரைவெட்) லிமிடெட், சி.இ.பி. எம்ப்லோயீஸ் (பிரை வெட்) லிமிடெட், என்ற அடிப்படையில் புதிதாக 6 நிறுவன கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்றார்.
