உலகம்
முதல் பெண் பிரதமராக ஜப்பானில் சனேடகாய்ச்சி!
முதல் பெண் பிரதமராக ஜப்பானில் சனேடகாய்ச்சி!
ஜப்பானில் முதல் பெண் பிரதமராக சனேடகாய்ச்சி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
64 வயதான இவர் ஜப்பானின் இரும்புப்பெண்மணி என்று அழைக்கப்படுகிறார். சனேடகாய்ச்சி இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சரின் அபிமானி என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்னாள் பிரதமர் ஷிகெரு இஷிபாதலைமையிலான லிபரெல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததால், இஷிபா தனது பிரதமர் பதவியைத் துறந்தார்.
இதனையடுத்து பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் அக்கட்சியினர் ஈடுபட்டுனர். கட்சியின் 295 எம்.பி.க்கள் உட்பட கட்சி நிர்வாகிகள்மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனேடகாய்ச்சி வரலாறு படைத்துள்ளார்.
செய்தி வாசிப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறி, அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பணியாற்றிய சனேடகாய்ச்சி ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பதவியை வென்றுள்ளார்.
