இலங்கை
பருத்தித்துறை மரக்கறி சந்தைக்கு விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்!
பருத்தித்துறை மரக்கறி சந்தைக்கு விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்!
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இன்றையதினம் பருத்தித்துறை மரக்கறி சந்தைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
பருத்தித்துறை நகர் வர்த்தகர்களால், பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிவந்த பருத்தித்துறை நகரின் நவீன சந்தை தொகுதிக்கு மாற்றுமாறு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும் மரக்கறி சந்தை வியாபாரிகளுக்கும் இடையில் பலத்த வாதபிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இச்சந்திப்பில் பருத்தித்துறை வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் குறித்த சந்தையை முன்பிருந்த இடத்திற்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
