இலங்கை
பிரான்சில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நினைவுக் கல் திறப்பு

பிரான்சில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நினைவுக் கல் திறப்பு
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கான நினைவுக் கல் பிரான்சில் திறக்கப்பட்டது.
பிரான்சின் 93 ம் பிராந்தின் தலைநகர் என கூறப்படும் BOBIGNY நகரசபைக்கு முன்னால் இக் கல் நிறுவப்படுவது குறிப்பிடத்தக்கது.
1948 ஆண்டு தொடக்கம் 2009 ஆண்டு வரையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவு சுமந்தே இக் கல் நிறுவப்படுகின்றது.
இன்றைய நாளில் அதற்கான மாதிரி செய்பட்டு திறக்கப்பட்டது.
ஒரு மாத்திற்குள்ளான காலப்பகுதியில் நினைவுக்கல் நாட்டப்படும் என மாநகரசபை முதல்வர் Abdel Sadi
அவர்களால் தெரிவிக்கப்பட்டது
இன்றைய நிகழ்வில் எமது மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.