இலங்கை
கொழும்பில் கட்டளையை மீறி பயணித்த வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
கொழும்பில் கட்டளையை மீறி பயணித்த வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
கொழும்பு ரத்மலானை – கொளுமடம சந்தியில், பொலிஸார் வழங்கிய கட்டளையை மீறி பயணித்த வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் வேனின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
