Connect with us

இலங்கை

சந்திரிக்காவின் புத்தகங்கள் கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு நன்கொடை

Published

on

Loading

சந்திரிக்காவின் புத்தகங்கள் கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு நன்கொடை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமது தனிப்பட்ட நூலகத்தில் இருந்து சில புத்தகங்களை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் நூலகத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

சமூக ஊடகங்களில் இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்ட சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, “எனது தனிப்பட்ட நூலகத்தில் இருந்து மதிப்புமிக்க கல்வி மற்றும் ஆய்வு நூல்களைத் தெரிவு செய்து கொழும்புப் பல்கலைக்கழக நூலகத்துக்கு நன்கொடையாக வழங்கினேன்.

Advertisement

மேலும், நூலக ஊழியர்களுடன் ஒரு சிறு பொழுதைக் கழித்தேன்” என்று குறிப்பிட்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தில், பேராசிரியர் ஜயதேவ உயங்கொட மற்றும் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி ஆகியோர் வழங்கிய ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்கும் தனது நன்றியை அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன