Connect with us

இந்தியா

Ration Card | புதிய ரேஷன் கார்டுகள் எப்போது வழங்கப்படும்? தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்

Published

on

Ration Card | புதிய ரேஷன் கார்டுகள் எப்போது வழங்கப்படும்? தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்

Loading

Ration Card | புதிய ரேஷன் கார்டுகள் எப்போது வழங்கப்படும்? தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்

தமிழ்நாட்டில் புதிதாக ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படுவதாக உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

Advertisement

நியாயவிலைக் கடைகளில் கிடைக்கும் அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி, அரசு வழங்கும் உதவித்தொகை, பேரிடர் கால நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு குடும்ப அட்டை முக்கிய ஆவணமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், தகுதி வாய்ந்தவர்கள் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.

குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய ரேஷன் அட்டை பெறுவதற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை 2,89,591 பேர் விண்ணப்பித்துள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. அதில், 1,54,500 நபர்களுக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், 1,28,373 நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6,640 நபர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் உணவுப் பொருள் வழங்கல் துறை கூறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன