இலங்கை
மட்டக்களப்பில் கரையொதுங்கும் சிவப்பு நண்டுகள்
மட்டக்களப்பில் கரையொதுங்கும் சிவப்பு நண்டுகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில கடற்பகுதியில் சிவப்பு நண்டுகள் கரையொதுங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு ஆகிய பகுதிகளில் உள்ள கடற்பகுதிகளில் இவ்வாறான நண்டுகள் கரையொதுங்கி வருகின்றன.
சிவப்பு நிறத்திலான சிறிய அளவிலான நண்டுகளே இவ்வாறு கரையொதுங்கிவருவதாகவும்,
காலநிலை மாற்றங்களினால் இவ்வாறு நண்டுகள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
சில காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறும் எனவும் கடலில் ஏற்படும் மாற்றங்களினாலும் இவ்வாறு நடக்கும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
