Connect with us

இந்தியா

டாப் 10 நியூஸ்: ராஜ்நாத் சிங் ரஷ்யா பயணம் முதல் மின்சார ரயில் அட்டவணையில் மாற்றம் வரை!

Published

on

Loading

டாப் 10 நியூஸ்: ராஜ்நாத் சிங் ரஷ்யா பயணம் முதல் மின்சார ரயில் அட்டவணையில் மாற்றம் வரை!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (டிசம்பர் 8) முதல் மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக ரஷ்யா செல்கிறார். அங்கு இருதரப்பு  நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ரஷ்ய கடற்படை வீரர் ஆண்ட்ரே பெலோசோவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

மதுரை வெளிச்சநத்தம் பகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று கொடியேற்ற இருந்த கொடிக்கம்பத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு இருந்த 25 அடி உயர கொடிக்கம்பம் 45 அடியாக உயர்த்தப்பட்டதால் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

Advertisement

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரியில் மத்தியக் குழு இன்றும் நாளையும் ஆய்வு செய்ய உள்ளது.

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை ஞாயிற்றுக்கிழமை நாட்களில் கால அட்டவணை மாற்றம் செய்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்காரணமாக, இந்த வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்தனர்.

Advertisement

கடலூர் மாவட்டத்தில் உள்ள தி.வேனூர் கூட்ரோடு பகுதியில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைக்கிறார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் தங்குவதற்கு வசதியாக, 156 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இன்று முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் 12-ஆம் தேதி ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் ரஜினி ரசிகர்கள் இன்று தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்கின்றனர்.

Advertisement

தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.23-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.81-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மன்னராட்சியா? மக்களாட்சியா? : அப்டேட் குமாரு

Advertisement

அரசியல் பயணம் எப்போது?: சசிகலா

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன