இலங்கை
04 வகை அரிசிகளுக்கான கட்டுப்பாட்டு விலையை கடுமையாக திட்டமிடும் அரசாங்கம்!

04 வகை அரிசிகளுக்கான கட்டுப்பாட்டு விலையை கடுமையாக திட்டமிடும் அரசாங்கம்!
ஜனவரி மாதம் முதல் 04 வகையான அரிசிகளுக்கான விலைக் கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென தேசிய அரிசி கைத்தொழில் சம்மேளனத்தின் புரவலர் அருணகாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, பிரதான அரிசி ஆலை உரிமையாளர்கள்,கீரி சம்பா விலையை உயர்த்துகின்றனர்.
கீரி சம்பா விலை உயரும் போது, விவசாயிகள் அடுத்த பருவத்தில் சாகுபடி செய்ய முயல்கின்றனர். கீரி சம்பா விலை குறையும் போது, மில் உரிமையாளர்கள் கிடங்குகளை நிரப்புகின்றனர்.
இந்த நாட்களில் நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே 04 வகை அரிசிகளுக்கும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கட்டுப்பாட்டு விலையை கடுமையாக அமுல்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.