இலங்கை
புயலாக மாறும் தாழமுக்கம் வடக்கில் மிதமான மழை!
புயலாக மாறும் தாழமுக்கம் வடக்கில் மிதமான மழை!
வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக முல்லைத்தீவிலிருந்து கிழக்கு வடகிழக்குத் திசையில் 606 கிலோமீற்றர் தொலைவில் காணப்படும் நிலையில் இன்று திங்கட்கிழமை அதிகாலை அது புயலாக மாற்றமடையும் என்று எதிர்வுகூறப்படுகின்றது.
இதனால் நாளை செவ்வாய்க்கிழமை வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என்றும், இன்று அதிகாலை அல்லது காலை முதல் பரவலாக மழை கிடைக்கும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
மீண்டும் வடக்கு வங்காள விரிகுடாவில் மியன்மாருக்கு அருகில் எதிர்வரும் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டுமொரு புதிய தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. இது மேற்குத் திசை நோக்கி நகருமென எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதன் நகர்வுத் திசை மற்றும் ஏனைய விபரங்களை அடுத்த சில நாள்களின் பின்னரே உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
