வணிகம்
சிவ் நாடாரின் ரூ.1,000 கோடி மதிப்புள்ள அசையா சொத்து சாம்ராஜ்யம்: கலைப் படைப்புகள் நிறைந்த பாரம்பரியம்!
சிவ் நாடாரின் ரூ.1,000 கோடி மதிப்புள்ள அசையா சொத்து சாம்ராஜ்யம்: கலைப் படைப்புகள் நிறைந்த பாரம்பரியம்!
உலகின் முதல் 60 பணக்காரர்களில் ஒருவராகவும், இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவராகவும் திகழும் தொழில்நுட்ப ஜாம்பவான் சிவ் நாடாரின் நிகர சொத்து மதிப்பு, ஃபோர்ப்ஸ் தரவுகளின்படி, $30 பில்லியனுக்கும் (சுமார் ₹2.50 லட்சம் கோடி) அதிகமாகும். ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸின் நிறுவனரான இவருக்கு, தொழில்நுட்ப சாம்ராஜ்யம் மட்டுமல்லாமல், கல்வி மற்றும் சமூக நலன்களிலும் பங்களிப்பு உள்ளது.இவரது குழுமத்தின் சொத்துகள் பெரும்பாலும் சிவ் நாடார் குழுமம் மற்றும் அறக்கட்டளை வழியாகவே உள்ளன. இவரது மகள் ரோஷ்னி நாடார், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹெச்.சி.எல் டெக் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்று, பட்டியலிடப்பட்ட தொழில்நுட்ப நிறுவனத்திற்குத் தலைமை தாங்கிய இந்தியாவின் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். ஹுருன் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இவர், ரூ.2.48 லட்சம் கோடி நிகரச் சொத்து மதிப்புடன் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரப் பெண்மணியாகவும் உள்ளார். இந்தக் கோடீஸ்வரர் குடும்பத்தில் கலை ஆர்வலரான கிரண் நாடாரும் இடம்பெற்றுள்ளார். கிரண் நாடார் அருங்காட்சியகத்தின் தலைவரும், அறங்காவலருமான இவர், பல நகரங்களில் கலை மற்றும் கலாச்சாரத்திற்குப் பங்களித்து வருகிறார்.சிவ் நாடாரின் முக்கியச் சொத்து விவரங்கள்1. 40,000 சதுர அடி டெல்லி என்.சி.ஆரில் வீடுடெல்லியின் மிக ஆடம்பரமான பகுதிகளில் ஒன்றான பிரண்ட்ஸ் காலனி (மேற்கு) பகுதியில் சிவ் நாடார் டெல்லி இல்லம் அமைந்துள்ளது. இது 40,000 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. மிக நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்ட புல்வெளிகள், தனிப்பட்ட கலைக்கூடங்கள் (Art Galleries) இதில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடு KNMA (கிரண் நாடார் அருங்காட்சியகம்) சேகரிப்பில் உள்ள கலைப் படைப்புகளைக் கொண்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் ஒரு சில தனிப்பட்ட கலாச்சார இல்லங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. இந்த இல்லத்தில் உள்ள கலைப் படைப்புகள், $85 மில்லியனுக்கும் (சுமார் ரூ.700 கோடி) அதிகமாக மதிப்பிடப்பட்ட 13,000 கலைப்படைப்புகளின் ஒரு பகுதியாகும்.2. ஹெச்.சி.எல் வளாகங்கள் (HCL Campuses)ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், ஹெச்.சி.எல் இன்ஃபோசிஸ்டம்ஸ் (Infosystems) உட்பட, இந்த குழுமம் நொய்டா, சென்னை மற்றும் பெங்களூரில் பிரம்மாண்டமான கார்ப்பரேட் வளாகங்கள் மற்றும் ஐ.டி பூங்காக்களைக் (IT Parks) கொண்டுள்ளது. இவற்றில், நொய்டாவில் உள்ள முதன்மை வளாகம் மட்டும் 50 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. இந்த வளாகங்கள் சுமார் ரூ.7,000 கோடிக்கும் அதிகமான மதிப்புடையவை. அனைத்து வளாகங்களிலும் நவீன ஆய்வகங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கான குடியிருப்பு கோபுரங்கள் போன்ற வசதிகள் உள்ளன.3. கல்வி நிறுவனங்கள்சிவ் நாடார் கல்வித் துறையில் ஈடுபட்டு, அறக்கட்டளையின் கீழ் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை அமைத்துள்ளார். கிரேட்டர் நொய்டாவில் உள்ள சிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் அதிநவீன வளாகம் 286 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இது மாணவர்களுக்குத் தங்கும் இடங்கள், புத்தாக்கப் பூங்காக்கள் மற்றும் விருந்தோம்பல் (Hospitality) இடங்களை வழங்குகிறது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் தன்னிறைவு என்ற நோக்குடன் வடிவமைக்கப்பட்ட இந்தச் சொத்தின் மதிப்பு ரூ.2,000 கோடி என்று கூறப்படுகிறது.4. கிரண் நாடாரின் கலை வளாகம்டெல்லியில் வரவிருக்கும் KNMA மத்திய விஸ்டா நுண்கலைக் வளாகம் (KNMA Central Vista Fine Arts Complex) சுமார் ரூ.500 கோடி மதிப்புடையதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டடக்கலை, கலை மற்றும் கல்வி ஆகியவற்றை ஒன்றிணைக்கும் நோக்குடன் அமைக்கப்படும் இந்தக் கலை வளாகம், ஏற்கெனவே உள்ள $85 மில்லியன் கலைச் சேகரிப்பையும் விஞ்சும் வகையில் இருக்கும்.
