Connect with us

சினிமா

33 வயதில் அகால மரணம்!! சினிமாவில் ஜெயித்து நிஜத்தில் வீழ்ந்த சஞ்ஜீவ் அக்கா சிந்து..

Published

on

Loading

33 வயதில் அகால மரணம்!! சினிமாவில் ஜெயித்து நிஜத்தில் வீழ்ந்த சஞ்ஜீவ் அக்கா சிந்து..

சினிமா மற்றும் சீரியல்களில் பலவிதமான ரோல்களில் நடித்து அசத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை சிந்து. 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சிந்து பல சீரியலிலும் நடித்து பெயர் எடுத்தார்.கதாநாயகி, வில்லி, குணச்சித்திர ரோலில் நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் தாய்மை உள்ளத்தோடு பலருக்கும் ஓடிஓடி உதவி செய்தார்.விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்ஜீவின் அக்கா தான் சிந்து. ரகுவீர் என்பவரை திருமணம் செய்து கொண்ட சிந்து, ஸ்ரேயா என்ற மகளை பெற்றெடுத்தார்.2005 ஜனவரி மாதம் 6ஆம் தேதி மகள் ஸ்ரேயாவிற்கு 9 வயதாக இருக்கும்போது சிந்து, ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்சனை காரணமாக தன்னுடைய 33வது வயதில் மரணமடைந்தார்.2004ல் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி ஓடிஓடி உதவி செய்துள்ளார். திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.தன்னுடைய அக்காவின் மகள் ஸ்ரேயாவை, சஞ்ஜீவ் வளர்த்து அவருக்கு திருமணத்தையும் செய்து வைத்திருக்கிறார். ஸ்ரேயா அஸ்வின் ராம் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன