இலங்கை
சீரற்ற காலநிலையால் 31,623 பேர் பாதிப்பு!
சீரற்ற காலநிலையால் 31,623 பேர் பாதிப்பு!
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 வீடுகள் முற்றாகவும், 847 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மறுஅறிவித்தல் வரும் வரை கடற்படை மற்றும் மீன்பிடித் தொழிலாளர்களை ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
