இலங்கை
யானைகளை மீளப்பெறுவதில் அரசமட்டத்தில் ஏற்பாடில்லை; தாய்லாந்து தூதுவர் தெரிவிப்பு!
யானைகளை மீளப்பெறுவதில் அரசமட்டத்தில் ஏற்பாடில்லை; தாய்லாந்து தூதுவர் தெரிவிப்பு!
தாய்லாந்தால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ‘தாய் ராஜா’ மற்றும் ‘கண்டுலு’ ஆகிய யானைகளை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுசெல்வது தொடர்பாக அரசாங்க மட்டத்தில் இதுவரை எந்தக் கவனமும் செலுத்தப்படவில்லை என்று தாய்லாந்துத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை முத்துராஜா யானை கொண்டுசெல்லப்பட்ட பின்னர் தற்போது நாட்டில் உள்ள தாய்லாந்து யானைகள் இரண்டில் ஒன்றான ‘தாய் ராஜா’வின் உடல்நிலை தமது மேற்பார்வையின் கீழ் இருப்பதாகவும், அந்த யானை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவபீடத்தின் பேராசிரியர் அசோக தங்கொல்ல கூறியுள்ளார் .
