இலங்கை
தலைதூக்குகிறது பாசிசவாத ஆட்சி; உதயகம்மன்பில தெரிவிப்பு!
தலைதூக்குகிறது பாசிசவாத ஆட்சி; உதயகம்மன்பில தெரிவிப்பு!
இலங்கையில் பாசிசவாதம் தலைதூக்கத் தொடங்கியுள்ளது எனப் பிவிதுரு ஹெல உறுமயக் கட்சியின் தலைவர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜேர்மனியில் ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் நிலவியது போல் இன்று இலங்கையில் பாசிசவாத ஆட்சி இடம்பெறுகிறது. இலங்கைப் பொலிஸார் ஜேர்மனியின் ஹிட்லரது ஆட்சிக்காலத்தில் இயங்கிய பொலிஸாரைப் போன்று செயற்படுகின்றார்கள். எதிர்பாராத விதமாக எதிர்பாராத நேரத்தில் மக்கள் விடுதலை முன்னணிக்கு இந்த ஆட்சி அதிகாரம் கிடைக்கப்பெற்றது. ஜனாதிபதி அநுரகுமாரவுக்குள் மறைந்திருந்த ஹிட்லர் தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாகத் தலைகாட்டத் தொடங்கியுள்ளார்- என்றார்.
