இலங்கை
2 கிலோ ஹெரோய்னுடன் இந்திய நாட்டவர் கைது!
2 கிலோ ஹெரோய்னுடன் இந்திய நாட்டவர் கைது!
84.96 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் 32 வயதான இந்தியப் பிரஜை எனத் தெரியவந்துள்ளது.
அவரிடமிருந்து 2 கிலோ 832 கிராம்ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப் பட்ட இந்தியப் பிரஜையை நீர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
