இலங்கை
உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகளுக்கும், பிரதமரின் செயலாளருக்கும் இடையிலான கலந்துரையாடல்!
உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகளுக்கும், பிரதமரின் செயலாளருக்கும் இடையிலான கலந்துரையாடல்!
உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியாகப் பதவியேற்ற பிலிப் வார்ட் மற்றும் பிரதி இயக்குநர் ரொபர்ட் ஒலிவர் ஆகிய இருவரும் இன்று பிரதமரின் அலுவலகத்தில், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்களைச் சந்தித்தனர்.
1968ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்பட்டு வரும் உலக உணவுத் திட்டம் , இலங்கையில் உணவுப் பாதுகாப்பு, போசாக்குப் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் காலநிலைச் சவால்களை எதிர்கொள்ளும் சமூகங்களின் தாங்குதன்மை ஆகியவற்றை வலுப்படுத்துவதில் ஆதரவை வழங்கி வருகிறது.
2023 – 2027ஆம் ஆண்டுக்கான உலக உணவுத் திட்டத்தின் வியூகத் திட்டம் மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், குறிப்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்குப் பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டத்திற்கமைய உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து செயற்படுவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த, சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு. எம்.எச்.ஏ.எம். ரிஃப்லான் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
