இலங்கை
போதைப்பொருள் வியாபாரம்; பெண் கைது
போதைப்பொருள் வியாபாரம்; பெண் கைது
ஏறாவூர்ப் பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 56 வயதான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவட்டப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து ஏறாவூர் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறித்த பெண்ணின் வீட்டை முற்றுகையிட்டு நேற்றுமுன்தினம் சோதனையிட்டபோதே இந்தக் கைது இடம்பெற்றது.
சந்தேகநபரிடம் இருந்து 5 ஆயிரத்து 350 மில்லிகிராம் ஐஸ்போதைப்பொருளும், இதன் மூலம் ஈட்டிய 3 இலட்சத்து 61 ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளன என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
