Connect with us

பொழுதுபோக்கு

இரு அணிகளுக்கு இடையே நடக்கும் பரபரப்பான நிகழ்வுகள் – வைரலாகும் வீடியோ

Published

on

big

Loading

இரு அணிகளுக்கு இடையே நடக்கும் பரபரப்பான நிகழ்வுகள் – வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் கடந்த அக்டோபர் 5-ந் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. வழக்கமாக பிரபலங்கள் பிக்பாஸ் போட்டியாளர்களாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமூக வலைதளங்களில் பிரபலமான நபர்கள் பிக்பாஸில் போட்டியாளர்களாக நுழைந்தது மக்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது. இந்நிகழ்ச்சி குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் கவனித்து வருகின்றனர்.பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்கள் பட்டியல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் போட்டியாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதை மறந்து தொடர்ந்து சண்டை போட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் என்ன பிரச்சனை வெடிக்கும் என்ற கோணத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற நிலையில் நந்தினி தன்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார். இதையடுத்து, முதல் வார நாமினேஷனில் பிரவீன் காந்தி வெளியேறினார்.தொடர்ந்து, அப்சரா சி.ஜே, ஆதிரை ஆகியோர் வெளியேறினர். பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருமே தங்களின் சுயரூபத்தை காட்டவில்லை என்பதே மக்களின் கருத்தாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், எப்போதும் இல்லாத அளவு சீசன் 9-ன் டி.ஆர்.பி ரேட்டிங்கும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.  எனவே உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு சார்பிரைஸ் கொடுக்கும் விதமாகவும், போட்டியை பரபரப்பாக்கும் திட்டத்துடன் பிக்பாஸ் தற்போது அடுத்தடுத்து சில வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே இறக்கியுள்ளனர். அதன்படி, பாக்யலட்சுமி, மகாநதி, அன்னம் போன்ற தொடர்களில் நடித்த திவ்யா கணேஷ், வைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார். மேலும், நடிகர் பிரஜின் அவரது மனைவி சாண்ட்ரா மற்றும் நடிகர் அமித் ஆகியோரும் வைல்டு கார்டு எண்ட்ரியில் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்கள் வருகை பிக்பாஸ் நிகழ்ச்சியை மேலும் பரபரப்பாக்கும் என்றும் ஏற்கனவே இருக்கும் போட்டியாளர்களின் சுயரூபத்தை வெளியே கொண்டு வரும் என்றும் கூறப்படுகிறது.#Day24#Promo1 of #BiggBossTamilBigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBossSeason9Tamil#BiggBoss9#BiggBossSeason9#VijaySethupathi#BiggBossTamil#BB9#BiggBossSeason9#VijayTV#VijayTelevisionpic.twitter.com/QePrPv1l7zஇந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 24-ஆம் நாளின் முதல் ப்ரொமோ வெளியாகியுள்ளது. அதில், திவாகர் தனது ஆக்டிங் திறமையை துஷார் முன்பு காட்டிக் கொண்டிருக்கிறார். திவாகர் டயலாக் பேசும் போது வினோத் பாட்டு பாடி திவாகரை கடுப்பேற்றுகிறார். இதனால், கோபமாகும் திவாகர் சபரியிடம் ஆக்டிங் பண்ணிட்டு இருக்கோம் வேணும்னே பண்றாங்க என்று சொல்கிறார். அதற்கு விக்ரம் இரண்டு பேரும் வீம்புக்கு என்ன வேணும்னாலும் பண்ணுங்க நாங்க எதுவும் இன்வால் ஆகமாட்டோம் என்கிறார். இதையடுத்து திவாகர், பிரவீன் ராஜிடம் சொல்கிறார் ஆக்டிங் பண்ணும்போது வினோத் வீம்பிற்காக பாடுகிறார் என்று சொல்கிறார். அதற்கு பிரவீன், வினோத் பாடுவது அவர் உரிமை என்று சொல்கிறார். இத்துடன் இந்த ப்ரொமோ முடிவடைகிறது.#Day24#Promo2 of #BiggBossTamilBigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBossSeason9Tamil#BiggBoss9#BiggBossSeason9#VijaySethupathi#BiggBossTamil#BB9#BiggBossSeason9#VijayTV#VijayTelevisionpic.twitter.com/yc9dcwXsVMதொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரொமோவில், கம்ருதீன், சபரியிடம் நான் வன்முறை செய்தேன், தள்ளிவிட்டேன் என்றார்கள். திவாகர் இன்று அதை தானே செய்திருக்கிறார் என்று கேட்கிறார். திடீரென எஃப்.ஜே அது ரொம்ப தப்பு புடிக்கலேனா புடிக்கல என்று கூறிவிட்டு திவாகர் மேல் கோபப்படுகிறார். இதனால், ஆத்திரமடைந்த திவாகர் ரொம்ப உத்தமன் மாதிரி பேசிட்டு இருக்க என்று சொல்லவும் சபரி, எஃப்.ஜே எல்லோரும் திவாகரை அடிக்க பாய்கின்றனர். இதனுடன் இந்த ப்ரொமோ முடிவடைகிறது. #Day24#Promo3 of #BiggBossTamilBigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBossSeason9Tamil#BiggBoss9#BiggBossSeason9#VijaySethupathi#BiggBossTamil#BB9#BiggBossSeason9#VijayTV#VijayTelevisionpic.twitter.com/1TwG6QPBspபிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரொமோவில் இரு அணிகளுக்கும் இடையே பரபரப்பான போட்டி நடைபெறுகிறது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்று சக போட்டியாளர்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன