இலங்கை
அரசாங்கப் பிணையங்களில் வெளிநாட்டு முதலீடு உயர்வு!
அரசாங்கப் பிணையங்களில் வெளிநாட்டு முதலீடு உயர்வு!
அரசாங்கப் பிணையங்களில் வெளிநாட்டு முதலீடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன என்று நிதிச்சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 23 ஆம் திகதிய நிலைவரப்படி, திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணைமுறிகளில் உள்ள வெளிநாட்டு உடைமைகள் ரூ. 130.96 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2023 நவம்பர் 16ஆம் திகதிக்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த அளவாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 23ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் மட்டும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அரசாங்கப் பிணையங்களில் ரூ. 606 மில்லியன் நிகர முதலீட்டை மேற்கொண்டுள்ளனர். இந்தப் போக்கு நாட்டின் அந்நியச்செலாவணிக் கையிருப்புக்கும், ரூபாயின் உறுதிக்கும் சாதகமான சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
