இலங்கை
நுவரெலியாவில் ஒருவரை கொலை செய்துவிட்டு பல லட்சம் ரூபா கொள்ளை: மூவர் கைது!

நுவரெலியாவில் ஒருவரை கொலை செய்துவிட்டு பல லட்சம் ரூபா கொள்ளை: மூவர் கைது!
நுவரெலியாவில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) டிப்போவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கொலைசெய்து ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் அதன் காசாளர் மற்றும் சாரதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆறாம் திகதி 85 வயதான பாதுகாப்பு அதிகாரி வெட்டிக் கொல்லப்பட்டு 1,052,167 ரூபா திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நுவரெலியா கல்பாய பகுதியைச் சேர்ந்த கே.லோகேஸ்வரன் (85) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.
பாதுகாப்பு உத்தியோகத்தர் கொல்லப்பட்ட பின்னர் இலங்கை போக்குவரத்து சபை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பதுளை மற்றும் மஹவ பிரதேசங்களில் வசிக்கும் 34 மற்றும் 55 வயதுடைய சந்தேகநபர்கள் குற்றச் செயல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் டிசம்பர் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.