சினிமா
கேன்சரால் பாதிக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்!! மனைவியுடன் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?

கேன்சரால் பாதிக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்!! மனைவியுடன் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?
கன்னட சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவ ராஜ்குமார் சமீபத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ஒருசில காட்சிகளே வந்த சிவ ராஜ்குமாருக்கு மிகப்பெரிய வரவேற்பை ஜெயிலர் படம் கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்திலும் நடித்திருந்தார். விஜய்யின் தளபதி69 படத்தில் முக்கிய ரோலிலும் நடித்து வருவதாகவும் தகவல் வெளியானது.சமீபத்தில் சிவ ராஜ்குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு இருக்கதாக தகவல் வெளியாகி அதிர்ச்சி கொடுத்தது. கடந்த 6 மாதங்களாக இந்தியாவிலேயே சிகிச்சை பெற்று வந்தவர் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சமீபத்தில் சென்றுள்ளார்.தற்போது சிகிச்சை பெற்று மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி திருப்பதி ஸ்ரீ வெங்கடேஷ்வரா கோவிலுக்கு தன் மனைவியுடன் சென்று வழிபட்டுள்ளார்.இருவரும் மொட்டை அடித்துள்ளதையும் , தன் மனைவியுடன் மொட்டை அடித்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார் சிவ ராஜ்குமார். அவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்காக விரைவில் குணமடைய வேண்டி வருகிறார்கள்.