இந்தியா
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.. பக்தர்களின் வசதிக்காக அரசு விடுத்த சிறப்பு அறிவிப்பு.!

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.. பக்தர்களின் வசதிக்காக அரசு விடுத்த சிறப்பு அறிவிப்பு.!
டிசம்பர் 13-ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா மற்றும் அடுத்த நாளான 14-ஆம் தேதி பௌர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளது.
இதற்காக 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, சென்னையில் இருந்தும், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
அந்த நாட்களில், 4 ஆயிரத்து 89 பேருந்துகள் மூலம் 10 ஆயிரத்து 110 நடைகள் இயக்கப்பட உள்ளன.
மேலும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக 9 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவலப் பாதையை இணைக்கும் வகையில், 40 சிற்றுந்துகள் கட்டணமில்லாமல் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.