இலங்கை
150 மில்லியன் ரூபா மோசடி செய்த பெண்ணை தேடும் பொலிஸார்
150 மில்லியன் ரூபா மோசடி செய்த பெண்ணை தேடும் பொலிஸார்
போலி ஆவணங்களை தயாரித்து, 150 மில்லியன் ரூபா மதிப்புள்ள காணி ஒன்றை விற்பனை செய்ததாக கூறப்படும் பெண் ஒருவரை கைதுசெய்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
சந்தேக நபரான பெண் பொலிஸில் முன்னிலையாகாமல் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபரான பெண்ணின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
இந்த புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 011 – 2434504 அல்லது 011 – 2422176 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
