Connect with us

பொழுதுபோக்கு

காதல், உண்மை, விதியால் இணையும் இதயங்கள்; ஜீ தமிழின் புது சீரியல் கதைக்களம் இதுதான்!

Published

on

Zee tamil New Seerial a

Loading

காதல், உண்மை, விதியால் இணையும் இதயங்கள்; ஜீ தமிழின் புது சீரியல் கதைக்களம் இதுதான்!

தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், திரைப்படங்கள் என பல கமர்ஷியல் அம்சங்களை ஒளிபரப்பி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வரும் ஜீ தமிழ், எப்போதும் புதுமையான கதைகளையும் மறக்க முடியாத கேரக்டர்களையும் தனது பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதேபோல் அவ்வப்போது புதிய சீரியல்கள் தொடக்கம்,பழைய சீரியல்கள் முடிவு என சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி வருகிறது.அந்த வரிசையில், மேலும் ஒரு சுவாரஸ்யமான தொடர் “திருமங்கல்யம்”, வரும் நவம்பர் 3, 2025 முதல், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. உணர்வுகள், திருப்பங்கள், விறுவிறுப்பான கதை என அனைத்தும் நிரம்பியுள்ள இந்த தொடர், ஒளிபரப்பாகும் முதல் நாளிலேயே பார்வையாளர்களின் இதயத்தை கொள்ளை கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.தனது பாரம்பரியமான சிறந்த நிகழ்ச்சிகளை வழங்கும் பணியை தொடரும் ஜீ தமிழ், அடுத்ததாக திருமாங்கல்யம் தொடரை ஒளிபரப்ப உள்ளது. ஒரு கிராமத்தை சேர்ந்த லட்சுமி என்ற பெண் அந்த கிராமத்திற்கே அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் பெண்ணாக இருக்கிறார். அதே சமயம், அவளது சித்தி அவளை ராசி கெட்டவள் என அவமானப்படுத்தி குடும்பத்தை விட்டு தள்ளி வைக்கிறாள்.ஒரு கட்டத்தில் அவளால் தான் தனது குடும்பத்திற்கே அதிர்ஷ்டம் என அறிந்து அந்த அதிர்ஷ்டம் தனது குடும்பத்தை விட்டு சென்று விட கூடாது என்பதற்காக ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்து கடைசி நொடியில் வயதான தனது தம்பிக்கு லட்சுமியை திருமணம் செய்து வைக்க திட்டமிடுகிறாள்.கடைசி நொடியில் நாயகன் திருவுக்கும் லட்சுமிக்கும் எப்படி திருமணம் நடக்கிறது? அடுத்து அவர்களின் வாழ்க்கையில் நடக்கப்போவது என்ன என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம். கதையின் நாயகியாக லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் மேக்ஹா என்பவர் நடிக்க நாயகனாக திரு என்ற கதாபாத்திரத்தில் பிரிதிவிராஜ் நடிக்கிறார். மேலும் திருவின் காதலியாக திவ்யா என்ற கதாபாத்திரத்தில் காயத்திரி ஸ்ரீ நடிக்கிறார். இந்தத் தொடரில் மதுமோகன், சசி லயா, வனிதா உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன