இலங்கை
யாழ்.மாவட்டப் போக்குவரத்து; எம்.பி.க்கள் நேரில் ஆராய்வு!
யாழ்.மாவட்டப் போக்குவரத்து; எம்.பி.க்கள் நேரில் ஆராய்வு!
இணைந்த அட்டவணை தொடர்பில் கூடுதல் கவனம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் இ.போ.ச. மற்றும் தனியார் பேருந்துச் சேவைகளின் குறைபாடுகள் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் நேற்று நேரடிக்களப்பயணம் மேற்கொண்டு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் யாழ். மேலதிக மாவட்டச் செயலர் சிவகரன், உள்ளூராட்சி ஆணையாளர் சுதர்சன், யாழ்ப்பாணம் பிரதேச செயலர், யாழ். மாநகர மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள் உட்படப் பலரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கெடுத்தனர்.
குறிப்பாக, தூரசேவை பேருந்து நிலையத்தில் இருந்து இரு பேருந்து சேவைகளையும் இணைந்த சேவை நேர அட்டவணையின் பிரகாரம் முன்னெடுப்பதில் இருக்கின்ற பிரச்சினைகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உயர்மட்டக் கலந்துரையாடல் மூலம் சிறப்புப்பொறிமுறையை ஏற்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
