இலங்கை
போதைமாத்திரைகளுடன் 7 சந்தேகநபர்கள் கைது!
போதைமாத்திரைகளுடன் 7 சந்தேகநபர்கள் கைது!
காங்கேசன்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் போதை மாத்திரைகளுடன் 7 சந்தேகநபர்கள் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை பிராந்திய மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கேற்ப அச்சுவேலி ஆவரங்கால் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இந்தக் கைது இடம்பெற்றது.
இதன்போது 306 போதை மாத்திரைகள் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவருக்கு ஏற்கனவே சில நிலுவை வழக்குகள் உள்ளன. சந்தேகநபர்கள் அனைவரும் மேலதிக சட்டநடவடிக்கைக்காக அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.
