Connect with us

இலங்கை

இலங்கையின் சனத்தொகை கணக்கெடுப்பு; வடக்கில் மிகக் குறைந்த மக்கள் தொகை!

Published

on

Loading

இலங்கையின் சனத்தொகை கணக்கெடுப்பு; வடக்கில் மிகக் குறைந்த மக்கள் தொகை!

  இலங்கையில் நடாத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பு தொடரில், 15வது கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 21,763,170 என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை வடக்கில் மிகக் குறைந்த மக்கள் தொகை பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

இலங்கை சனத்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு 2024″ இன் கணக்கெடுப்புப் பணிகள் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி இரண்டாவது வாரம் வரை மேற்கொள்ளப்பட்டன.

இந்தக் கணக்கெடுப்பின் கணக்கெடுப்பு நேரமாக, 2024 டிசம்பர் 19 ஆம் திகதி அதிகாலை 00:00 மணி குறிப்பிடப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டின் சனத்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில் பதிவான மொத்த மக்கள் தொகையை விட, இந்த முறை மக்கள் தொகை 1,403,731 அதிகமாக பதிவாகியுள்ளது.

Advertisement

2001-2012 இடைப்பட்ட கணக்கெடுப்புக் காலப்பகுதியில், மக்கள் தொகையின் சராசரி வருடாந்த வளர்ச்சி வீதம் 0.7% ஆக பதிவாகி இருந்தது.

தற்போதைய 2012-2024 இடைப்பட்ட கணக்கெடுப்புக் காலப்பகுதியில், மக்கள் தொகையின் சராசரி வருடாந்த வளர்ச்சி வீதம் 0.5% ஆக பதிவாகியுள்ளது.

இதன்படி, நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறைந்துள்ள போதிலும், மக்கள் தொகை தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பது தெளிவாகிறது.

Advertisement

இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 28.1% உடன் மேல் மாகாணமே அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

மிகக் குறைந்த மக்கள் தொகையான 5.3% வடக்கு மாகாணத்தில் வாழ்கின்றனர்.

மாவட்ட மட்டத்தில் மக்கள் தொகை பரம்பலை எடுத்துக்கொண்டால்:

Advertisement

கம்பஹா மாவட்டத்திலேயே அதிக மக்கள் தொகை வாழ்கிறது. அதன் மக்கள் தொகை 2,433,685 ஆகும்.

அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட கொழும்பு மாவட்டத்தின் மக்கள் தொகை 2,374,461 ஆகும்.

2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டுமே வசிக்கின்றனர்.

Advertisement

கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களைத் தவிர, கடந்த கால கணக்கெடுப்புகளைப் போலவே, இந்த முறையும் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டங்கள் பின்வருமாறு ,

குருநாகல் (1,760,829)

கண்டி (1,461,269)

Advertisement

களுத்துறை (1,305,552)

இரத்தினபுரி (1,145,138)

காலி (1,096,585)

Advertisement

இந்த ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை பதிவாகியுள்ளது.

முந்தைய கணக்கெடுப்புகளைப் போலவே, இந்த முறையும் நாட்டின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களாக வடக்கு மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு (122,542),

மன்னார் (123,674),

Advertisement

கிளிநொச்சி (136,434), மற்றும் வவுனியா (172,257) ஆகிய மாவட்டங்கள் பதிவாகியுள்ளன.

வளர்ச்சி வீதம்:

அதிகபட்ச சராசரி வருடாந்த வளர்ச்சி வீதமான 2.23% முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

Advertisement

மிகக் குறைந்த சராசரி வருடாந்த வளர்ச்சி வீதமானது வவுனியா மாவட்டத்தில் 0.01% ஆகப் பதிவாகியுள்ளது.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன