இலங்கை
வடக்கு மாகாணசபையை திசைகாட்டியே கைப்பற்றும்; பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவிப்பு
வடக்கு மாகாணசபையை திசைகாட்டியே கைப்பற்றும்; பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவிப்பு
வடக்கு மாகாணசபை உட்பட நாட்டின் அனைத்து மாகாணசபைகளையும் தேசிய மக்கள் சக்தியே கைப்பற்றும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற உறுதி மொழியை தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கியுள்ளோம். பரந்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குரிய நகர்வுகள் விரைவில் ஆரம்பமாகும். நிறைவேற்று அதிகாரம் பிரதமர் மற்றும் அமைச்சரவை வசம் இருக்கும். தனி நபரிடம் அதிகாரம் இருந்ததால்தான் இந்தநாடு வங்குரோத்து அடைந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் விட்டதரப்புகள், ‘தேர்தல் எப்போது நடைபெறும்?’ என்று தொடர்ச்சியாக வினவுகின்றன. தேர்தல் எப்போது என அரசாங்கத்திடம் கேட்பது அவர்களின் உரிமை. அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால். மாகாணசபைகளைக் கைப்பற்றப் போவது நாங்கள்தான். வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மாகாணசபைகளையும் கைப்பற்றுவோம் – என்றார்.
