இலங்கை
இலங்கையின் பொருளாதாரத்தில் அடுத்தாண்டு 3.1 வீத வளர்ச்சி!
இலங்கையின் பொருளாதாரத்தில் அடுத்தாண்டு 3.1 வீத வளர்ச்சி!
அடுத்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் 3.1 வீதம்வரை வளர்ச்சியடைய முடியும் என்று சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்ட, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்ப்லின் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கை அரசாங்கம் சீர்திருத்த வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்த பின்னணியில், பொருளாதார வளர்ச்சியில் வலுவான மீட்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வளர்ச்சி 5 வீதமாகக் காணப்பட்ட அதேவேளை, இந்த ஆண்டின் முதல் பாதியில் வளர்ச்சி 4.8 வீதமாக இருந்தது. தற்போது அந்த வலுவான மீட்சியிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு சாதாரண நிலைக்குத் திரும்புதல் மாத்திரமே நிகழ்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
