பொழுதுபோக்கு
இதுவரை முறியடிக்கப்படாத சாதனை… 31 வருடத்திற்குப் பிறகும் ஐ.எம்.டி.பி-யில் நம்பர் ஒன் இடம்; இந்தப் படம் பார்த்திருக்கீங்களா?
இதுவரை முறியடிக்கப்படாத சாதனை… 31 வருடத்திற்குப் பிறகும் ஐ.எம்.டி.பி-யில் நம்பர் ஒன் இடம்; இந்தப் படம் பார்த்திருக்கீங்களா?
சினிமாவில் எல்லா படங்களும் வெற்றி பெற்று காலம் கடந்து பேசப்படுவதில்லை. ஒரு சில படங்கள் மட்டுமே காலம் கடந்தும் பேசப்படுகிறது. அப்படி 31 வருடங்களாக ஐ.எம்.டி.பி-யில் முதலிடத்தில் உள்ள படம் தான் ‘தி ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்ஷன்’ ( The Shawshank Redemption) இப்படம் கடந்த 1994-ஆம் ஆண்டு வெளிவந்தது. இருந்தாலும், ஐ.எம்.டி.பி-யில் முதலிடத்தில் உள்ளது. அது ஏன்? இந்த படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.கதைக்களம்’தி ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்ஷன்’ படத்தின் கதாநாயகனின் பெயர் ஆண்டி (Andy). இவர் வங்கியில் முக்கியமான பணியில் வேலை செய்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இவர் செய்யாத ஒரு தவறுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து கடுமையான ஜெயிலுக்கு இவரை அனுப்பி விடுவார்கள். அதுவரை வாழ்க்கையில் எந்த கஷ்டத்தையும் பார்க்காத அவர் அந்த ஜெயிலில் நிறைய கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவிப்பார். இப்படியே 20 வருடம் கடந்து போகிறது. இத்தனை வருடங்களில் ஆண்டிக்கு சொந்தமான நிறைய விஷயங்களை அந்த ஜெயில் பறித்துக் கொண்டாலும், ஒரு விஷயத்தை மட்டும் அவரிடமிருந்து அந்த ஜெயிலால் பறிக்க முடியவில்லை. அதுதான் அவருடைய நம்பிக்கை. சொல்லப்போனால், அந்த நம்பிக்கையை வைத்து தான் அந்த சிறைசாலையில் ஒரு நல்ல நட்பை உருவாக்கியிருப்பார். ஒரு பெரிய லைப்ரரியை கட்டி நிறைய பேருக்கு கல்வியை சொல்லிக் கொடுத்திருப்பார். அதே நம்பிக்கையை வைத்து தான் கடைசியாக அந்த ஜெயிலை விட்டும் தப்பிப்பார். கிட்டத்தட்ட 20 வருடங்களாக ஒரு சின்ன சுத்தியலை வைத்து ஜெயில் சுவரில் கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டை போட்டு யாருக்கும் தெரியாத மாதிரி அந்த ஜெயிலை விட்டு தப்பித்திருப்பார். கதாநாயகன் ஆண்டி அந்த ஜெயிலுக்கு வரும் போதே இங்கிருந்து ஒருநாள் கண்டிப்பாக தப்பித்து விடலாம் என்று நம்பினார். அதற்காக மிகவும் பொறுமையாக காத்திருந்திருப்பார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. படத்தினுடைய கிளைமேக்ஸில் அவர் ஆசைப்பட்ட வாழ்க்கையை தன்னுடைய 50-வது வயதிலிருந்து வாழ ஆரம்பிப்பார்.இந்த படம் அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஓ.டி.டி தளங்களில் ஸ்ட்ரீமாகி வருகிறது. இந்த படத்தில் ஆண்டி கூறிய ஒரு டயலாக் மிகவும் பிரபலமடைந்தது. அது “நம்பிக்கை ஒரு நல்ல விஷயம், ஒருவேளை சிறந்த விஷயமாக இருக்கலாம்; எந்த நல்ல விஷயமும் ஒருபோதும் இறக்காது.” என்பார். இந்த நம்பிக்கை தரும் படத்தை மேற்குறிப்பிட்ட ஓ.டி.டி-களில் நீங்களும் பார்த்து மகிழுங்கள்.
