Connect with us

பொழுதுபோக்கு

நடிகை டூ டீச்சர், 50-வது பிறந்த நாளில் அஞ்சுவை அழ வைத்த மாணவர்கள்: லேட்டஸ்ட் வீடியோ!

Published

on

Anju Aravin

Loading

நடிகை டூ டீச்சர், 50-வது பிறந்த நாளில் அஞ்சுவை அழ வைத்த மாணவர்கள்: லேட்டஸ்ட் வீடியோ!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை அஞ்சு அரவிந்த் சமீபத்தில் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அவரது நடனப்பள்ளி மாணவர்கள் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இது குறித்து அஞ்சு அரவிந்த் தனது சமூகவலைதள வீடியோவில் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளார்.மலையாளத்தில் சிபி மலையில் இயக்கிய ‘அக்ஷரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அஞ்சு அதன்பிறகு, ‘பார்வதி பரிணயம்’, ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, ‘அழகிய ராவணன்’, ‘ஸ்வப்னலோகத்தே பாலபாஸ்கரன்’, ‘கல்யாணப்பிற்றேன்னு’, ‘தோஸ்த்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் பூவே உனக்காக திரைப்படம் தான் இவர் நடித்த முதல் படம். அதன்பிறகு ரஜினியுடன் அருணாச்சலம் படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார். கேப்டன் விஜயகாந்துடன் வானத்தைபோல, வாஞ்சிநாதன், உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த அஞ்சு அரவிந்த், கடைசியாக கடந்த 2001-ம் ஆண்டு வெளியான கண்ணா உன்னை தேடுகிறேன் என்ற படத்தில்  நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள அஞ்சு அரவிநத், தற்போது மலையாள படங்களில் மட்டும் நடித்து வருகிறார். மேலும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வரும் அஞ்சு நடனப்பள்ளி நடத்தி வருகிறார். இதனிடையே சமீபத்தில் தான் அஞ்சு தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்தநாள் அன்று தனது நடனப் பள்ளிக் குழந்தைகள் கொடுத்த ஆச்சரியம் (சர்ப்ரைஸ்) தன்னைக் கண்ணீர் விட வைத்துவிட்டது என்று அஞ்சு கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்த முறை பிறந்தநாளுக்கு என் குழந்தைகள் என்னை நிஜமாகவே அழ வைத்துவிட்டார்கள். கவலையினால் அல்ல, மகிழ்ச்சியால் தான். பொதுவாக, நான் கண்டிப்பான ஆசிரியை. ஆனால், அவர்களின் கண்களில் இருந்த அன்பைப் பார்த்தபோதும், பிறந்தநாளைக் கொண்டாட அவர்கள் எடுத்த முயற்சியைப் பார்த்தபோதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது, கண் நிறைந்துவிட்டது,” என்று அஞ்சு கூறியுள்ளார். அஞ்சுவுக்கு அன்விகா என்ற ஒரு மகள் இருக்கிறார். மகள் தற்போது ப்ளஸ் ஒன் (பதினொன்றாம் வகுப்பு) படித்து வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ஜகலா என்ற படத்தில் அஞ்சு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன